விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது. ஸ்டாலின் , சுஜிதா ,குமரன்,வெங்கட்,ஹேமா,காவியா,சரவணவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரமிற்கு ஜோடியாக சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் சில நடிகைகள் வந்து சென்றனர் கடைசியாக இவருக்கு ஜோடியாக இந்த தொடரில் இணைந்தவர் தீபிகா.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தீபிகா இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் வெளியேறுகிறார் என்றும் இவருக்கு பதிலாக கனா காணும் காலங்கள்,ஈரமான ரோஜாவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான சாய் காயத்ரி தீபிகாவிற்கு பதிலாக இந்த தொடரில் இணைந்துள்ளார் சாய் காயத்ரியின் எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

தான் விலகியது குறித்த காரணத்தை நமது கலாட்டாவுடனான நேர்காணலில் தீபிகா தெரிவித்துள்ளார் அதோடு தன்னை மாற்றப்போகிறார்கள் என்று தெரிந்ததும் சரவணவிக்ரம் மற்றும் இயக்குனர் குழுவில் உள்ளவர்களிடம் கால் செய்து அழுததாக தெரிவித்துள்ளார்.நான் எந்த தவறுமே செய்யாதபோது என்னை மாற்றிவிட்டனர் என்று புலம்பினேன் பின்னர் நிலைமையை புரிந்துகொண்டேன் என்று தெளிவாக பேசியுள்ளார்.இவரது இந்த தெளிவான பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.