விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது. ஸ்டாலின் , சுஜிதா ,குமரன்,வெங்கட்,ஹேமா,காவியா,சரவனவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரமிற்கு ஜோடியாக சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் இணைந்தவர் தீபிகா.சில சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த தீபிகா அடுத்ததாக கலர்ஸ் தமிழ் சீரியலில் சப்போர்டிங் ரோலில் நடித்து அசத்தினார்.

அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் தொடர்ந்து நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இவரது நடிப்பு சில பாராட்டுகளையும் சில திட்டுக்களையும் பெற்று வருகிறது.இந்த தொடரில் பிரபலமான இவர் பெயரில் தற்போது சிலர் போலி சமூகவலைத்தள கணக்குகளை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்,இவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தீபிகா.

pandian stores serial actress vj deepika about fake social media profiles