சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் ஷூட்டிங் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.மிகவும் பிரபலமான இந்த தொடரின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தனி தனியாக ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.அவர்கள் இந்த கொரோனா நேரத்தில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.குறிப்பாக முல்லையாக நடித்து வரும் சித்ராவின் ரசிகர்கள் விறுவிறுப்பாக உதவிகளை செய்து வருகின்றனர்.தற்போது சித்ரா ரசிகர்கள் அவரின் புகைப்படம் பொறித்த மாஸ்க்களை தயாரித்துள்ளனர்.இவற்றை ஏழை,எளிய மக்களுக்கு கொடுத்து உதவ உள்ளனர்.இவர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

pandian stores mullai fans create corona awareness with masks