சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்து வந்தவர் சித்ரா.இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் அதிர்ச்சியாக்கும் வகையில் இவரது மரண செய்தி இருந்தது.ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் சித்ரா.அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் சித்ரா.

இந்த செய்தி அவரது ரசிகர்கள்,நண்பர்கள்,பிரபலங்கள் என்று பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி சேனல்களிலும் பணியாற்றிய சித்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.இவர் நடித்து வந்த முல்லை என்ற கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த தொடரில் மிகவும் பிரபலமாக இருந்தது சித்ரா மற்றும் குமரன் இருவரின் ஜோடி தான்.இவர்களுக்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்து வந்தனர்.சித்ராவின் திடீர் மரணம் தற்போது சீரியலில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் குடும்பத்தினருக்கு பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வந்தனர்.அந்த வகையில் சித்ராவிற்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த குமரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.உங்களுடைய தைரியத்துக்கு தான் நீங்கள் பெயர்போனவர், பல பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துவந்த நீங்கள் இப்படி முடிவெடுத்தது நம்பமுடியவில்லை என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

A post shared by Chithuvj🌹 fan🌹 kandhasamy🌹 c.k (@chithuvj_fan_kandhasamy__c.k)