சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வந்த சித்ரா சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.இவர் மறைவை அடுத்து அந்த கேரக்டரை அப்படியே முடித்துக்கொண்டு ,  இந்த கேரக்டருக்கு புதிதாக யாரையும் மாற்றவேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவரது மறைவுக்கு பிறகு சீரியல் குழுவினர் இவருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு ஷூட்டிங்கை தொடங்கினர்.தற்போது சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் எமோஷனல் ஆகி வருகின்றனர்.