விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்து வந்தவர் சித்ரா.இவர் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

சித்ராவின் மரணம் குறித்த காரணம் என்ன என்று எவருக்கும் இதுவரை தெரியவில்லை , இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று விரைவில் திருமணம் நாடகவிருதப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

சித்ராவின் இந்த திடீர் முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை சித்ராவின் குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.மிகவும் தைரியமான பெண்ணான சித்ரா எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தார் என்றும் பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சித்ரா நேற்று இரவு வரை போஸ்ட்களை பதிவிட்டு வந்துள்ளார்.இவர் கடைசியாக நடிகை சரண்யாவுடன் பங்கேற்று வந்த நிகழ்ச்சி ஒன்றின் வீடீயோவை தனது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தான் சித்ரா பதிவிட்டுள்ள கடைசி வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.