விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது. ஸ்டாலின் , சுஜிதா ,குமரன்,வெங்கட்,ஹேமா,காவியா,சரவனவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரமிற்கு ஜோடியாக சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் சில நடிகைகள் வந்து சென்றனர் கடைசியாக இவருக்கு ஜோடியாக இந்த தொடரில் இணைந்தவர் தீபிகா.

சில சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த தீபிகா அடுத்ததாக கலர்ஸ் தமிழ் சீரியலில் சப்போர்டிங் ரோலில் நடித்து அசத்தினார்.அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது தீபிகா இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் வெளியேறியுள்ளார் என்றும் இவருக்கு பதிலாக கனா காணும் காலங்கள்,ஈரமான ரோஜாவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான சாய் காயத்ரி தீபிகாவிற்கு பதிலாக இந்த தொடரில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.