சன் டிவியின் பிரபல தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஆர்த்தி சுபாஷ்.சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தி வந்த இவர் அடுத்ததாக சீரியல் மூலம் நடிகையாகவும் தனது என்ட்ரியை கொடுத்தார் ஆர்த்தி சுபாஷ்.

2019 முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.இந்த தொடரின் ஒரு நாயகியாக ஆர்த்தி சுபாஷ் நடித்து அசத்தி வருகிறார்.மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவருக்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் க்ரித்திகா,பாப்ரி கோஷ்,அணு,டெல்லி குமார்,நரேஷ் ஈஸ்வர்,நேசன் நெப்போலியன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆர்த்தி சுபாஷ் தனது புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார்.

நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார் ஆர்த்தி சுபாஷ்.சீரியலில் தன்னுடன் நடிக்கும் அணுவுடன் ஒரு முத்த வீடீயோவை அவர் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.