தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கடந்த 2019 முதல் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம்.

இந்த தொடரில் பாப்ரி கோஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்,மற்றொரு ஹீரோயினாக ஆதித்யா டிவி,சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கிய ஆர்த்தி சுபாஷ் நடித்து வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.க்ரித்திகா,அணு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஷைலு இம்ரான் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்,இவருக்கு பதிலாக மதுமிதா இளையராஜா இவருக்கு பதிலாக நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.