தமிழ் திரையுலகில் சீரான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அட்டக்கத்தி தினேஷ். கடைசியாக அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் நடிப்பில் தேரும் போரும் திரைப்படம் உருவாகி வருகிறது. 

pallupadamapathuka

தற்போது விஜய் வரதராஜ் இயக்கும் பல்லு படாம பாத்துக்க திரைப்படத்தில் நடித்துள்ளார் தினேஷ். மேஜிக் ரேஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, ஷாரா, ராஜேந்திரன், ஜகன், லிங்கா, சாய் தீணா ஆகியோர் நடிக்கின்றனர். பாலமுரளி பாலு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பள்ளு மற்றும் ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கின்றனர். 

zombie zombie

படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஜாம்பி குறித்த திரைப்படமான இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கைவசம் வாராயோ வெண்ணிலாவே, பல்லு படாம பாத்துக்கோ, நானும் சிங்கிள் தான் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.