தினேஷ் நடிப்பில் விஜய் வரதராஜ் இயக்கியுள்ள திரைப்படம் பல்லு படாம பாத்துக்க. மேஜிக் ரேஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, ஷாரா, ராஜேந்திரன், ஜகன், லிங்கா, சாய் தீணா ஆகியோர் நடிக்கின்றனர். பாலமுரளி பாலு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பள்ளு மற்றும் ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கின்றனர். 

sanchitha Sanchitha

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஜாம்பி குறித்த திரைப்படமான இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டபுள் மீனிங் வசனம் அதிகமுள்ள இந்த படம் இளைஞர்கள் விரும்பும் படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. 

Sanchitha Sanchitha Sanchitha

ஸ்னீக் பீக் காட்சிகளை தொடர்ந்து கோவமா குட்டிமா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. விஷ்ணுபிரியா பாடிய இந்த பாடல் வரிகளை பாலமுரளி பாலு எழுதியுள்ளார். சஞ்சிதா ஷெட்டிக்கு சூதுகவ்வும் திரைப்படத்திற்கு பிறகு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்றே கூறலாம். சஞ்சிதாவின் இந்த கிளாமர் நடனத்திற்கு அரங்கமே அதிரும் என்று கூறலாம்.