தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். தொடர்ந்து விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் விருதுகளையும் அள்ளிக் குவிக்கும் பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறையோடு தனது ஒவ்வொரு திரைப்படங்களையும் நேர்த்தியாக கொடுத்துவரும் இயக்குனர் பா.ரஞ்சித் முதல் முறையாக நடிகர் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், கேஜிஎஃப் கதைக்களத்தை மையமாகக்கொண்டு பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் தயாராகிறது.

முன்னதாக, இதுவரை திரைத்துறையில் பலரும் பேசத் தயங்கிய காதலின் பரிமாணத்தை தைரியமாக உலகிற்கு உணர்த்த இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளள்ளார். இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திலிருந்து பேரின்ப காதல் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பேரின்ப காதல் வீடியோ பாடல் இதோ…