ஆகச் சிறந்த இயக்குனராக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது சீயான் விக்ரமுடன் இணைந்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தொடரந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் வேட்டுவம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியானது. மேலும் பாலிவுட்டில் பழங்குடியின மக்களின் தலைவரான பிர்ஸா முண்டாவின் பயோபிக் திரைப்படத்தையும் பா.ரஞ்சித் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் அழகிய காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. வழக்கமாக இயக்குனர் பா.ரஞ்சித் உடன் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அல்லாமல் முழுக்க முழுக்க புது அணியினரான கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், டென்மா இசையமைத்துள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Love is Political! #NatchathiramNagargiradhu, My next directorial, coming soon to cinemas near you. @officialneelam @YaazhiFilms_ pic.twitter.com/ss1oRNf6HQ

— pa.ranjith (@beemji) July 6, 2022