"சார்பட்டா 2 தயாராகிறது!"- மீண்டும் இணையும் பா ரஞ்சித் - ஆர்யா கூட்டணி... அட்டகாசமான அறிவிப்போடு வந்த மாஸ் GLIMPSE இதோ!

இயக்குனர் பா ரஞ்சித் ஆர்யாவின் சார்பட்டா 2 தயாராகிறது,Pa ranjith arya in sarpatta round 2 official announcement | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான தரமான படைப்புகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் பலரும் பேச தயங்கிய, பேசவே பயந்த பாலினம் சார்ந்த மிக முக்கிய கதைகளத்தை கையாண்ட இயக்குனர் பா.ரஞ்சித் அதை மிகவும் நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் சிறப்பாகவும் சமூகத்திற்கு எடுத்துரைத்திருக்கிறார். எக்கச்சக்கமான பாராட்டுகளால் குவிந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு பிறகு தற்போது தனது தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரும் சிறந்த நடிகருமான சீயான் விக்ரமுடன் முதல் முறை கைகோர்த்த இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கே ஜி எஃப் கதை களத்தை மையமாகக் கொண்டு 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹரி கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய இடங்களில் நடித்து வருகின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் தங்கலான் படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ஒரு திரைப்படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இணைய இருப்பதாக தெரிகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தொடர்ச்சியாக சார்பட்டா ரவுண்ட் 2 திரைப்படம் தயாராக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, தமிழகத்தில் 1970 - 80களில் பிரபலமான குத்துச்சண்டையை மையப்படுத்தி தயாரான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை நிலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தன. ஆர்யாவுடன் இணைந்து துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, பசுபதி, ஜான் கொக்கென், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததோடு பாராட்டுகளையும் பெற்றது. மக்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக கொண்டாடப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார், வேம்புலி, கெவின், டான்சிங் ரோஸ் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிக அழுத்தமாக மக்களின் மனதில் பதிந்தன.

இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராக உள்ளதாக வெளிவந்திருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் ஹிந்தி தயாரிப்பாளர் ஜெத்தின் சேத்தி அவர்களின் நாட் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் சார்பட்டா ரவுண்ட் 2 திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சர்ப்ரைஸாக வந்திருக்கும் சார்பட்டா 2 அறிவிப்பை தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டகாசமான சார்பட்டா 2 அறிவிப்பு போஸ்டர் இதோ…
 

Hear the sound of the bell? That's the mark for round 2️⃣ 🔥
Brace yourself for #Sarpatta2 🥊❤️‍🔥

A @beemji film 💙@arya_offl #TheShowPeople @NaadSstudios #JatinSethi @kabilanchelliah @pro_guna @gobeatroute pic.twitter.com/ZyuGZ8yk5a

— Neelam Productions (@officialneelam) March 6, 2023

விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே
சினிமா

விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி ட்ரீட் தயார்… கோஸ்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி ட்ரீட் தயார்… கோஸ்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

ரிலீஸுக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்… அதிரடி அறிவிப்புடன் வந்த புது வீடியோ இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்… அதிரடி அறிவிப்புடன் வந்த புது வீடியோ இதோ!