பிக்பாஸ் குறித்து ஓவியாவின் சர்ச்சை கருத்து ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | July 26, 2020 14:03 PM IST

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது பலரும் ஆர்வத்தோடு இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.ஓவியா,ஆரவ்,கஞ்சா கருப்பு,பரணி,பொன்னம்பலம்,வையா
முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,அடுத்த வருடம் சீசன் 2 தொடங்கியது ,சீசன் 1-லிலேயே இவ்வளவு பரபரப்பு இருக்க சீசன் 2 மட்டும் குறைச்சலாக இருக்குமா என்ன என்று ரசிகர் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தனர்.யாஷிகா ஆனந்த்,மஹத்,ஜனனி ஐயர்,ரித்விகா,தாடி பாலாஜி,சென்றாயன்,மும்தாஜ்,ஐஸ்
அதுதான் எல்லாமே பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் ,அடுத்த சீசன் தொடங்கியது.இந்த சீசன் தொடக்கத்தில் ஷெரின்,சாண்டி,கவின்,லாஸ்லியா,
இந்த மூன்று சீசனில் பங்கேற்ற பிரபலங்களும் , பல லட்சம் ரசிகர்களை பெற்று நட்சத்திர அந்தஸ்துக்கு வெகு விரைவில் உயர்ந்தனர்.ஆனால் அவற்றை தக்கவைத்துக்கொண்டு வெற்றிகரமாக இருப்பது சிலர் மட்டுமே,ஹரிஷ் கல்யாண்,ரைசா,மஹத் போன்றோர் பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பின் படங்களில் நடிப்பதில் பிஸி ஆகி தங்களின் ரசிகர்களை தக்கவைத்து வருகின்றனர்.தற்போதைய சீசன் மூலம் பிரபலமான கவின்,லாஸ்லியா,வனிதா ஆகியோர் தங்களது நட்சத்திர அந்தஸ்தை சரியாக பயன்படுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை அள்ளிக்குவித்தவர் என்றால் அது ஓவியா தான்,ஓவியா ஆர்மி என்று தொடங்கி ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர்.அவர் எங்கு சென்றாலும் அவரை காண ரசிகர்கள் பெருங்கூட்டமாய் கூடி வந்தனர்.ஆனால் ஓவியா பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஒரு பதிவிட்டுள்ளார் ஓவியா.அதில் பிக்பாஸ் தொடரை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்கிறீர்களா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார் ஓவியா.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது.இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே ஒரு ரசிகரின் பதிவுக்கு பதிலளித்த ஓவியா, போட்டியாளர்களை TRP-க்காக தற்கொலை செய்ய தூண்டக்கூடாது என்று பதிலளித்தார்.மேலும் ஒரு ரசிகர் மதுமிதா தனது விளம்பரத்துக்காக கையை அறுத்துக்கொண்டார் என்று பதிவிட்டார் இதற்கு பதிலளித்த ஓவியா யாரும் விளம்பரத்திற்காக இப்படி பட்ட காரியத்தை செய்யமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.மற்றுமொரு ரசிகர் இந்த ஷோ இல்லையென்றால் உனக்கு ரீச்சே இல்லை பதிவிட்டார், இதனை கவனித்த ஓவியா புகழை விட உயிர் மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண்,ரைசா,மஹத்,ஆரவ்,கவின்,