பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ஓவியா. அதற்கு முன்பே அவர் படங்களில் நடித்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு அதிக அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. ஓவியா ஆர்மி என்று சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர் மன்றங்களை துவங்கினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் ஓவியா மிக அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். 

கடந்த வருடம் அதிகமான படங்களில் நடித்திருந்தார் ஓவியா. அவர் நடிப்பில் 90ml என்ற திரைப்படம் வெளியானது. அதன் பின் கணேஷா மீண்டும் சந்திப்போம், ஓவியா விட்டா யாரு போன்ற படங்களில் நடித்திருந்தார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருந்த காஞ்சனா 3 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ஓவியா. அதன் பின் களவாணி 2 திரைப்படம் வெளியானது. இதில் விமல் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்தில் கெஸ்ட் என்ட்ரி தந்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் ஓவியாவிற்காக ஆர்மி அக்கவுன்ட் நடத்தி வந்த ரசிகர் மரணம் அடைந்து இருக்கிறார். சாகுறதுக்குள்ள உங்கள பாக்கணும் என அது பற்றி ட்விட்டர் கணக்கில் மற்ற ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர். அதை பார்த்த ஓவியா அதிர்ச்சியுடன் பதில் அளித்துள்ளார்.

அந்த ரசிகையின் பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும் ஓவியா கூறி உள்ளார். இது நியாயம் இல்லை. இந்த இழப்பை நினைத்து நான் வேதனை அடைகிறேன். சன்வியின் பெற்றோரை எப்படி தொடர்பு கொள்வது என கூறுங்கள். சன்வி எங்கிருந்தாலும் அமைதியுடன் இருப்பார் என நம்புகிறேன் என ஓவியா தெரிவித்து உள்ளார்.

பொறுப்பான வகையில் ஓவியா அளித்துள்ள இந்த பதில் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் ரசிகர்களுக்காக அக்கறையுடன் பேசும் விதத்தை பாராட்டி பேசி வருகின்றனர். ஓவியா போல மற்ற பெரும்பாலான நடிகர்கள் இருப்பதில்லை என்றும் ஓவியா ரசிகர்கள் அவரை பெருமையாக பேசி வருகின்றனர். ஓவியா அடுத்ததாக பிளாக் காஃபி, சம்பவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.