தமிழ் திரை உலகில் ஆகச் சிறந்த நடிகராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முன்னதாக நடிகர் சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலுக்கான போட்டியில் கலந்துகொண்டன. இந்நிலையில் தற்போது ஆஸ்கார் அகாடமி நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான புதிய உறுப்பினர்களாக இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் காஜலை தேர்வு செய்துள்ள ஆஸ்கர் அகாடமி இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் தேர்வு குழு உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் உறுப்பினர் குழுவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

#JUST_IN : ஆஸ்கர் விழா - நடிகர் சூர்யாவுக்கு அதிகாரபூர்வ அழைப்பு !

உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ஆஸ்கர் அகாடமி. @Suriya_offl #Suriya #Oscars pic.twitter.com/a8Y8ckCbdC

— Galatta Media (@galattadotcom) June 29, 2022