இறுதிச்சுற்று படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிக்ஸை வெற்றியுடன் துவக்கிய மாதவன்.அடுத்ததாக விக்ரம் வேதா படத்தின் மூலம் செம ஹிட் கொடுத்தார்.செலெக்ட்டிவ் ஆக படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.

Online Standup Comedian Alex Joins Madhavan Maara

அனுஷ்கா நடிக்கும் ஒரு தெலுங்கு படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.இதனை அடுத்து இவர் துல்கர் சல்மான் நடிப்பில் 2015ல் வெளியாகி செம ஹிட் அடித்த சார்லி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீபன் இயக்குகிறார்.

Online Standup Comedian Alex Joins Madhavan Maara

இந்த படத்திற்கு மாறா என்று பெயரிட்டுள்ளது.ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல ஆன்லைன் காமெடியனான அலெக்ஸ் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.