தளபதி விஜய் நடிப்பில் 2021 பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளுக்கு நம்பிக்கை தந்த திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க கொரோனா முதல் அலையால் லாக்டவுன் போடப்பட்டது.பின்னர் சில மாதங்கள் கழித்து கொரோனா தாக்கம் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் இந்தியாவில் எந்த படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை.இந்த நிலையில் திரைப்படங்களை வெளியிட பல பெரிய படங்களும் தயங்கி வந்தன.

அந்த நேரத்தில் மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி பட்டிதொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டியது.லோகேஷின் வித்தியாசமான திரைக்கதை,அனிருத் இசை,விஜய்-விஜய்சேதுபதி மோதல் என படம் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட் ஆக அமைந்தது.

அப்படி இருந்த சூழ்நிலையில் விஜயின் மாஸ்டர் படம் வெளியாகி திரையரங்குகளுக்கு நம்பிக்கையை கொடுத்தது.50% ரசிகர்களுடன் பெரிய வெற்றியை மாஸ்டர் பெற்றது அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக உற்சாகத்தையும் கொடுத்தது.இப்படி ஒரு காரணம் இருக்க படத்தில் வரும் JD என்ற கதாபாத்திரம் ரசிகர்களின்  மனம் கவர்ந்த ஆல் டைம் Favourite கதாபாத்திரமாக மாறியது.

இன்று இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது.இதனை ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.இந்த கொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் படக்குழுவினர் பலரும் இணைந்து சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.படத்தின் தயாரிப்பு நிறுவனம் படம் தொடங்கியதில் இருந்து வெளியான பிறகு வரை கடந்துவந்த பாதையை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.