வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் ஒன்றரை வயது குழந்தை !
By Sakthi Priyan | Galatta | April 25, 2020 20:50 PM IST

XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதனால் மிகுந்த சோகத்தில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். டிக்டாக் செய்வது, நடனம், பாடல் என ரிலாக்ஸ் செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு பலர் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் தவிர்த்து திரைப்பிரபலங்களும் நடனமாடி வருகின்றனர். இந்நிலையில் ஒன்றரை வயது குழந்தை வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அனிருத் வரும் காட்சிகளுக்கு ஏற்றார் போல் குழந்தை ஆடுகிறது என குழந்தையின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
@anirudhofficial @Jagadishbliss @actorvijay @XBFilmCreators she s 1yr & 5 months old baby!! Music connects! And when ever anirudh appears in the video she says Ani and starts dancing!! Ithu chumma sample. Full song dance video also we have recorded!! pic.twitter.com/x6DJeF0ZtZ
— BHARATHI RAJ (@bharathi1990) April 25, 2020
Coronavirus TN update: 66 New Cases | 1 Death | Total - 1821 Cases & 23 Deaths
25/04/2020 07:00 PM
GV Prakash confirms that he will be acting in Vetri Maaran's directorial film
25/04/2020 06:09 PM
Coronavirus from barber's salon infects 6 people in Madhya Pradesh
25/04/2020 05:33 PM