பிரபல ஹாலிவுட் இயக்குனரான குவேண்டின் டரண்டினோ இயக்கத்தில் இதுவரை வெளியான 8 படங்களும் உலகளவில் பெரிதும் பேசப்பட்டு வருவனவாகும். தற்போது இவரது 9-வது படமான Once Upon a Time In Hollywood படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. 

Once Upon A Time In Hollywood Movie Trailer Brad Pitt Dicaprio

1960-களில் ஹாலிவுட் சினிமா எப்படி இருந்தது என்பதை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் டிகாப்ரியோ மற்றும் பிராட் பிட் நடித்துள்ளனர். ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

Once Upon A Time In Hollywood Movie Trailer Brad Pitt Dicaprio

ஒரு நல்ல நடிகருக்கும், டூப் ஆர்ட்டிஸ்ட்டுக்கும் இடையே நடக்கும் விஷயங்களை ஆழமாக சித்தரித்துள்ளார் இயக்குனர். மேலும் புரூஸ்லீ கதாபாத்திரத்தையும் மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கின்றனர் படக்குழு.