ஓ மை கடவுளே படத்தின் கதைப்போமா பாடல் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | February 25, 2020 17:11 PM IST

அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் வெளியான இப்படம் சக்கை போடு போட்டது.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இளைஞர்கள் விரும்பும் வகையில் இடம்பெற்றது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. தற்போது படத்திலிருந்து கதைப்போமா பாடல் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார்.
Samantha gets support from Aditi Rao Hydari
25/02/2020 04:40 PM
Ala Vaikunthapurramuloo - ButtaBomma Full Video Song | Allu Arjun, Pooja Hegde
25/02/2020 04:00 PM
Pattas heroine Mehreen Pirzada responds to hotel bills controversy
25/02/2020 03:52 PM