ஓ மணப்பெண்ணே படம் குறித்த சூப்பர் தகவல் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | February 04, 2021 22:38 PM IST

2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu.தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கெளதம் மேனன் 2016-ல் கைப்பற்றி அவரே தயாரித்து வெளியிட திட்டமிட்டிருந்தார்.
பொன் ஒன்று கண்டேன் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்தனர்.பின்னர் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டு,ரீமேக் உரிமையும் கைமாற்றப்பட்டது.A Studios LLP, A Havish Production, SP Cinemas, Madhav Media and Third Eye Entertainment இணைந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றனர்.
இந்த படம் புதிய குழுவோடு தொடங்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.அறி
ஓ மணப்பெண்ணே என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Adding some flavours to the valentine month, #OhManapenne motion poster will be released by @anirudhofficial tomorrow at 5️⃣ PM❤️@iamharishkalyan @priya_Bshankar @KaarthikkSundar @ThirdEye_Films @thespcinemas @krishnanvasant @Composer_Vishal pic.twitter.com/8BQjd9dSPt
— Madhav Media (@madhavmedia) February 4, 2021
Cooku with Comali's Pavithra Lakshmi in Bigg Boss Kavin's new project
04/02/2021 09:19 PM
Jiiva - Arulnithi's Kalathil Sandhippom gets a wide and massive release!
04/02/2021 07:29 PM