தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துள்ளார்.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.இந்த படங்களின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்தார் சிவகார்த்திகேயன்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.முதலில் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் பின்னர் ரம்ஜானுக்கு தள்ளிப்போனது.தற்போது நிலவி வரும் கொரோனா சூழலில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இருந்தாலும் இந்த படத்தினை OTT-யில் வெளியிடவேண்டும் என்று சில ரசிகர்களும் வேண்டாம் என்று சில ரசிகர்களும் , படத்தை பற்றிய ஏதேனும் ஒரு அப்டேட் கொடுங்கள் என்றும் சமூகவலைத்தளங்களில் படக்குழுவினரிடம் கேட்டு வந்தனர்.தற்போது இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான KJR ஸ்டுடியோஸ் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அதில் எங்களிடம் அப்டேட் கேட்கும் ரசிகர்களே நாட்டில் இதுபோன்ற நிலையில் பட ரிலீஸை பற்றி யோசிக்கும் தருவாயில் நாம் இல்லை எனவே அனைவரும் பத்திரமாக இருங்கள் விரைவில் நிலைமை சரி ஆனதும் டாக்டர் அப்டேட் வரும் என்று தெரிவித்துள்ளார்.