ஒடிசா மாநிலத்தில் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிரேகா ஓஜா ஒடிசாவின் நயாபள்ளி பகுதியில் தனது காதலர் சந்தோஷ் பார்த்தவுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கிருந்து தனது பணிகளை தொடர்ந்துள்ளார். முன்னதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிரேகா ஓஜா வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் உள்ளே தாழிடப்பட்டிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து போலீசார் வீட்டுக்கு வந்து நடிகை தூக்கில் தொங்கியபடி கிடந்த ராஷ்மிரேகா ஓஜாவை சடலமாக மீட்டனர். இறப்பதற்கு முன் நடிகை ராஷ்மிரேகா எழுதிய கடிதத்தில் யாரையும் குறிப்பிடாததால் அவரது மரணம் தற்கொலையாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது அவரது காதலரான சந்தோஷ் பத்ரா, 15 நாட்கள் கழித்து ராஷ்மிரேகா ஓஜாவை போலவே அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சந்தோஷ் பத்ரா நல்ல மனிதர் எனவும் காதலியின் மரணத்தால் மனமுடைந்து விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் பிரபலமான சின்னத்திரை நடிகையான ராஷ்மிரேகா ஓஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் தற்போது அவரது காதலரும் அடுத்த 15 நாட்களுக்குள் அதேபோல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அடுத்தடுத்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.