யூடியூபில் அதிக ரசிகர்களை குறுகிய காலத்தில் கவர்ந்திழுத்த சேனல்களில் ஒன்று எருமசானி.இந்த சேனலில் வந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.எருமசானி குழுவினர் இணைந்து ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தை எடுத்துள்ளனர்.

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Second Single From June 19

கிளாப்போர்டு ப்ரோடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.யாஷிகா ஆனந்த்,ரித்விகாவுடன் இணைந்து எருமசானி விஜய்,ஹரிஜா,கோபி,சுதாகர் உள்ளிட்ட யூடியூப் நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கௌஷிக் க்ரிஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Second Single From June 19

இந்த படத்தின் டைட்டில் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான மகவே என்ற பாடல் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 19ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.