தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜூனியர் என் டி ஆர்.தனது படங்கள் மூலம் தெலுங்கில் ஒரு மாஸ் ஹீரோவாக அசத்தி வருகிறார்.ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஜூனியர் என் டி ஆர்.Jr NTR நடிப்பில் உருவாகவுள்ள NTR 31 படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளனர்.இந்த படத்தினை கே ஜி எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார்.

இன்று ஜூனியர் என் டி ஆர் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இதனை முன்னிட்டு NTR 31 படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.இந்த பவர்புல் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

செம வைரலாகி வரும் இந்த போஸ்டருடன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 2023-ல் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்னர்.இரண்டு பெரிய ஹிட் கொடுத்த நடிகர் மற்றும் இயக்குனர் ஒன்றிணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.