தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் ஹரிஷ் கல்யாண்.இவரது ஓ மணப்பெண்ணே படம் கடைசியாக நேரடியாக OTT யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சில படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.அதில் ஒரு முக்கிய படம் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் இவர் இணைந்துள்ள நூறு கோடி வானவில் படம்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

சித்தி இத்நானி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.கோவை சரளா,தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காதல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீஸரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.செம ரொமான்டிக் ஆன இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்