கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. பிறகு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் உலகளவில் உள்ள ரசிகர்களை ஈர்த்தார். மலையாள படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக விளங்குகிறது. சமீபத்தில் நயன்தாராவுடன் லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் நடித்திருந்தார்.

NivinPauly Celebrates His Son Birthday In Lockdown

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். லாக்டவுனில் பலர் தங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

NivinPauly Celebrates His Son Birthday In Lockdown

இந்நிலையில் நடிகர் நிவின் பாலி தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மகனின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை பாய் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தின் கீழ் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.