கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தங்கமீன்கள் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு மூன்று தேசிய விருதுகளும் பெற்றது. 

தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த தரமணி மற்றும் பேரன்பு ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விருதுகளையும் குவித்தது. மேலும் நடிகராகவும் சவரக்கத்தி & சைக்கோ ஆகிய திரைப்படங்களில் நடித்த இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தில் முன்னணி மலையாள நடிகர் நிவின் பாலியுடன் இணைந்தார்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு வழக்கம்போல் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு மதி.VS படத்தொகுப்பு செய்துள்ளார். நடன இயக்குனராக சாண்டி மாஸ்டரும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வா மாஸ்டரும் பணியாற்றியுள்ளனர்.

V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு “ஏழு கடல் ஏழு மலை” என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு கடல் ஏழு மலை டைட்டிலை அறிவிக்கும் வகையில் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…