மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் ஃபேவரட் காம்போவான சமுத்திரக்கனி - தம்பி ராமையா இணைந்து நடிக்கும் ராஜா கிளி திரைப்படத்தை தனது வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார்.

இதனிடையே கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு என தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை வழங்கி வரும் இயக்குனர் ராம் உடன் கைகோர்த்தார் சுரேஷ் காமாட்சி. இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என பெயரிடப்பட்டது.

நிவின்பாலியுடன் இணைந்து அஞ்சலி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திற்கு NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, மதி.VS படத்தொகுப்பு செய்துள்ளார். வழக்கம்போல் இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

மேலும் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டரும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வா மாஸ்டரும் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து அஞ்சலியின் கதாப்பாத்திரத்தை அறிவிக்கும் புதிய கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…

Presenting the first look of @yoursanjali in #YezhuKadalYezhuMalai#DirectorRam @VHouseProd_Offl @sureshkamatchi @NivinOfficial @sooriofficial @thisisysr @eka_dop @johnmediamanagr@UmeshJKumar @silvastunt @praveengoffl @Malik_Ayishaoff #7k7m pic.twitter.com/Evv8u32pq7

— sureshkamatchi (@sureshkamatchi) November 9, 2022