குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழ்,தெலுங்கு மொழிகளில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நிவேதா தாமஸ்.சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ்.இதனை தொடர்ந்து துணை நடிகையாக தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.

திரிஷ்யம்,போராளி,குருவி என்று பல படங்களில் துணை நடிகையாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் நிவேதா தாமஸ்.தொடர்ந்து கவனம் பெற்றுவந்த நிவேதா தாமஸ்,நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த படம் பெரிய வரவேற்பை பெறாததால் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிவேதா தாமஸ்.

நானி,ஜூனியர் NTR என்று பெரிய நடிகர்களோடு ஜோடி போட்டு இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்தன.இதனை அடுத்து மீண்டும் தமிழில் பெரிய நடிகர்கள் படங்களில் முக்கிய வேடத்தில் நடிக்கத்தொடங்கினார் நிவேதா.பாபநாசம்,ஜில்லா,தர்பார் என்று முன்னணி நடிகர்கள் படத்தில் அசத்திய இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தெலுங்கில் சில முன்னணி படங்களில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.தற்போது இவரது பழைய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தனது சகோதரருடன் சேர்ந்து கரகாட்டம் ஆடும் நிவேதாவின் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

A post shared by Celebrity Couples (@celebritycouples.in)