ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர் நிவேதா பெத்துராஜ்.இவர் அடுத்தடுத்து தமிழில் நடிக்க இவருக்கு ரசிகர்களும் கூடத்தொடங்கினர்.இதையடுத்து சில பெரிய படங்களிலும் நடித்தார்.

NIvetha Pethuraj Video About Fake Twitter IDs

ஜெயம் ரவியுடன் இவர் நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் ஹிட் அடித்தது.இதையடுத்து ஜெகஜால கில்லாடி,பொன் மாணிக்கவேல் ,பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கிலும் ஹீரோயினாக அவ்வப்போது நடித்துவந்த நிவேதா பெத்துராஜ்.

NIvetha Pethuraj Video About Fake Twitter IDs

கடைசியாக அல்லுஅர்ஜுனின் சூப்பர்ஹிட் படமான Ala Vaikunthapuramuloo படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சில காரணங்களால் ட்விட்டரில் இருந்து கடந்த 2018 ஜூலையில் விலகிய நிவேதா பெத்துராஜ் ஏப்ரல் தொடக்கத்தில் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார்.ஆனால் இவரது பெயரை பயன்படுத்தி பலரும் ட்விட்டரில் தவறான செய்திகள் பரப்பி வருவதாகவும்,தற்போதுள்ள காரணத்தால் தன்னால் verified அக்கவுண்ட் ஆக முடியவில்லை என்றும் விளக்கி தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் நிவேதா.