ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர் நிவேதா பெத்துராஜ்.இவர் அடுத்தடுத்து தமிழில் நடிக்க இவருக்கு ரசிகர்களும் கூடத்தொடங்கினர்.இதையடுத்து சில பெரிய படங்களிலும் நடித்தார்.ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் சூப்பர்ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜெகஜால கில்லாடி, பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் ,வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கிலும் ஹீரோயினாக அவ்வப்போது நடித்துவந்த நிவேதா பெத்துராஜ்.கடைசியாக அல்லுஅர்ஜுனின் சூப்பர்ஹிட் படமான Ala Vaikunthapuramuloo படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இவரது பார்ட்டி படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது.இவர் நடித்த பொன் மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.லாக்டவுன் நேரத்தில் நிவேதா பெத்துராஜ் உடற்பயிற்சி,யோகா உள்ளிட்டவற்றை தவறாமல் செய்து வருவதுடன் அதுகுறித்த வீடியோ சிலவற்றை வெளியிட்டு வந்தார்.

தற்போது புதிய துவக்கமாக கார் பந்தய மைதானத்தில் ரேஸ் கார்களை ஓட்டி கற்றுவருவதாக சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.கார் ரேஸிங் மீது ஏற்பட்டுள்ள அலாதி பிரியத்தால் இதனை கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார் நிவேதா,விரைவில் கார் ரேஸிங்கில் கலக்க நிவேதாவிற்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்