ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர் நிவேதா பெத்துராஜ்.இவர் அடுத்தடுத்து தமிழில் நடிக்க இவருக்கு ரசிகர்களும் கூடத்தொடங்கினர்.இதையடுத்து சில பெரிய படங்களிலும் நடித்தார்.ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் சூப்பர்ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜெகஜால கில்லாடி, பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் ,வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கிலும் ஹீரோயினாக அவ்வப்போது நடித்துவந்த நிவேதா பெத்துராஜ்.கடைசியாக அல்லுஅர்ஜுனின் சூப்பர்ஹிட் படமான Ala Vaikunthapuramuloo படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சில காரணங்களால் ட்விட்டரில் இருந்து கடந்த 2018 ஜூலையில் விலகிய நிவேதா பெத்துராஜ் ஏப்ரல் தொடக்கத்தில் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார்.இவரது பார்ட்டி படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது.இவர் நடித்த பொன் மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் கொரோனா பாதிப்பு குறைந்த பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணாமாக பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.பலரும் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் லைவ்வாக வருவது என்று ரசிகர்களுடன் தங்கள் நேரத்தை செலவிட்டு வந்தனர்.நிவேதா பெத்துராஜ் உடற்பயிற்சி,யோகா உள்ளிட்டவற்றை தவறாமல் செய்து வருவதுடன் அதுகுறித்த வீடியோ சிலவற்றை வெளியிட்டு வந்தார்.

இவரது பழைய போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.இதனை தொடர்ந்து வீட்டில் கால்பந்து ஆடி வீடியோ சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.