"சம்பவம் LOADING"- வேகமெடுக்கும் தனுஷின் அதிரடியான கேப்டன் மில்லர் பட இறுதி கட்டப் பணிகள்... முக்கிய நடிகை கொடுத்த மாஸ் அப்டேட்!

தனுஷின் கேப்டன் மில்லர் டப்பிங்கில் நிவேதிதா சதீஷ்,Nivedhithaa sathish shared a photo from captain miller movie dubbing | Galatta

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகராகவும் இந்திய சினிமாவின் மிக முக்கிய நாயகராகவும் உலக சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகராகவும் தனக்கென தனி பாதை வகுத்து தரமான திரைப்படங்களையும் அட்டகாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகர் தனுஷ். நடிப்பின் அசுரன் என மக்கள் கொண்டாடும் நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கின்றன. அந்த வகையில் தனது திரை பயணத்தில் 50வது படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தை இயக்கி நடிகிறார் தனுஷ். அடுத்து சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் D51 படத்தில் அடுத்து தனுஷ் நடிக்க இருக்கிறார். 

தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் தனுஷ், விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் இணைய இருக்கிறார். இதனிடையே ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை நிவேதிதா சதீஷ் டப்பிங் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “சம்பவம் லோடிங் #கேப்டன்மில்லர் என குறிப்பிட்டு இருக்கிறார். நடிகை நிவேதிதா சதீஷின் அந்த பதிவு இதோ…