கமனம் படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை வெளியானது !
By Sakthi Priyan | Galatta | September 18, 2020 12:49 PM IST

இந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். 2011-ம் ஆண்டில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து உலகளவில் உள்ள ரசிகர்களை பெற்றார். சென்ற வருடம் நித்யா மேனன் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். அக்ஷய்குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்த மிஷன் மங்கள் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ் என்ற வெப் சீரிஸில் நடித்தார். பிற மொழிகளில் பிஸியாக இருக்கும் நித்யா மேனன், குறைந்த அளவிலான தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருமுகன், மெர்சல் ஆகிய படங்களுக்குப் பிறகு கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் கமனம் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக கமனம் படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.
கமனம் படத்தில் பாடகி ஷைலாபுத்ரி தேவி என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனனின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த். தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்க, அழகான புன்னகையுடன் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடிகை நித்யா மேனன் அந்த போஸ்டரில் தோற்றமளிக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு கமனம் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலருடைய வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருப்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.
ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
OFFICIAL: Anushka's next biggie to have a direct OTT release | New Video here
18/09/2020 01:26 PM
Arya shares Kalaiyarasan's new training video for Pa. Ranjith's boxing film!
18/09/2020 12:05 PM
Siddharth's next film officially announced - teams up with this leading hero!
18/09/2020 12:00 PM