கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிஷா கிருஷ்ணன்.சரவணன் மீனாட்சி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார்.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரில் திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சையமான நடிகையாக மாறினார் நிஷா.

தொகுப்பாளினியாக சன் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தினார்.இதனை அடுத்து தலையணை பூக்கள் உள்ளிட்ட சில தொடர்களில் ஹீரோயினாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.இவற்றை தவிர நான் சிகப்பு மனிதன்,இவன் வேற மாதிரி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

2015-ல் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்துகொண்டார் நிஷா.சில வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்.இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்து வரும் தொடர் செம்பருத்தி.ஷபானா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ப்ரியா ராமன் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.நிஷா இந்த தொடரில் புது என்ட்ரியாக இணைந்துள்ளார்.கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து இவர் சீரியலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்த ப்ரோமோ ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்.