விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி முதல் முறையாக 18 போட்டியாளர்களுடன்  நடைபெற்றது. பிரியங்கா தேஷ்பாண்டே, இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பாவனி ரெட்டி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, சுருதி ஜெயதேவன், அபிநய் வட்டி, அக்ஷரா ரெட்டி, தாமரைச்செல்வி, சின்ன பொண்ணு, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

எப்போதும் போலவே இந்த முறையும் பிக் பாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. காரசாரமான விவாதங்களும் பரபரப்பான டாஸ்க்குகளும் என விறுவிறுப்பாக நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தற்போது நிறைவடைந்துள்ளது. முன்னதாக இறுதிப் போட்டியில் கட்டாயம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிபி பிக்பாஸ் வேண்டிய 12 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு இறுதி வாரத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பு வெளியேறினார்.

இதனை அடுத்து வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்து டிக்கெட் டு ஃபினாலி டாஸ்க்கில் வெற்றி பெற்ற முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைய, இறுதி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் தாமரைச்செல்வி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற, ராஜு, நிரூப், பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். இதனையடுத்து இவர்களிலிருந்து வெற்றியாளர்களை மக்கள் தங்களது வாக்குகளால் தீர்மானித்தனர்.

அதன்படி பல கோடி மக்களின் இதயங்களை வென்ற ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும் மூன்றாவது இடத்தில் பாவனியும் நான்காவது ஐந்தாவது இடங்களை அமீர் மற்றும் நிரூப் பெற்றனர். 106 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் முதல்முறையாக நிரூப் வீடியோ பதிவிட்டு தனக்காக ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  இந்த உலகமே வித்தியாசமாக தெரிவதாகவும் 106 நாட்களை கடந்து தற்போது வெளியில் வந்துள்ள தான், பார்வையாளர்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வத்தோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிரூப்பின் அந்த வீடியோ இதோ…