வழக்கம்போல் இந்த சீசனிலும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 5 முதல் வாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து திடீரென ஒரே வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 2-வது வாரத்தின் தொடக்கத்தில் பாவனி மற்றும் தாமரைச்செல்வியைத் தவிர மற்ற 15 போட்டியாளர்களும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள். 2-வது வாரத்தின் முடிவில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடியா சாங்  முதலாவதாக பிக்பாஸ் 5-லிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து 3-வது வாரத்தின் தொடக்கமான இன்று (அக்டோபர் 18)  2-வது நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. முன்னதாக வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் பாவனி, அக்ஷரா மற்றும் சின்னபொண்ணு ஆகியோரை மற்ற போட்டியாளர்கள் காரணங்களோடு நாமினேட் செய்யும் வீடியோ வெளியானது. தொடர்ந்து இந்த வாரம் தலைவர் போட்டியும் இன்று நடைபெறுகிறது.

சற்றுமுன் வெளியான புதிய ப்ரோமோ வீடியோவில் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் போட்டியில் ராஜு, பாவனி, இசைவாணி மற்றும் சிபி ஆகியோர் போட்டியாளராக ஆளுக்கு ஒரு கூண்டில் நிற்கின்றனர். நீரூப் மற்றும் அபிஷேக்  பெண் வேடமணிந்து போட்டியாளர்களை சிரிக்கவைக்க எடுக்கும் முயற்சிகள் என வெளியான கலகலப்பான புதிய ப்ரோமோ வீடியோ இதோ…