“பெட்ரோல் விலை உயர்வுக்கு, தீ குளிப்பவர்களே காரணம் என்று மத்திய அமைச்சரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வரலாறு காணாத பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோ மொபைல் துறை சரிவைச் சந்திப்பதற்கு, OLA மற்றும் UBER நிறுவனங்களின் சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்று பேசியிருந்தார்.

Nirmala Sitharaman

இந்த செய்தி இணையத்தில் பரப்பப்பட்டது. இதற்குப் பதில் சொல்லும் வகையில், நெட்டிசன்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதன்படி ஒருவர் அளித்துள்ள பதிலில், “அதிக Divorce களுக்கு, அதிக கல்யாணங்களே காரணம்” என்று பதில் அளித்துள்ளார்.

ets trolled online

இன்னொருவர் அளித்துள்ள பதிலில், “காஸ் விலை உயர்வுக்கு SWiggy, Zomato தான் காரணம். தங்கம் விலை உயர்வுக்கு கவரிங் நகைகளே காரணம். பெட்ரோல் விலை உயர்வுக்கு தீ குளிப்பவர்களே காரணம்” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தற்போது, இந்த மீம்ஸ் எல்லாம் வைரலாகி வருகிறது.