தமிழ் திரையுலகில் வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கியவர் அகத்தியன். இயக்குனர் அகத்தியனுக்கு 3 மகள்கள். இவர்கள் மூவருமே பிரபலமானவர்கள். இவர்களுள் மூத்த மகள் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சிறுகதை தொகுப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்தார். இன்னொரு மகள் விஜயலட்சுமி தமிழ் திரையுலகில் நடிகையாகவும் இருக்கிறார். பிக்பாஸிலும் புகழ்பெற்றார். 

இதேபோல் இளைய மகளும் நடிகையுமான நிரஞ்சனி, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக நடித்த நிரஞ்சனிக்கு தான் தற்போது திருமண வேலைகள் மும்முரமாக நடந்துள்ளன. 

இந்நிலையில் அவர் வீட்டில் மெஹந்தி போடும் நிகழ்வு நடந்தது. இதில் தான் நிரஞ்சனியின் சகோதரிகளும் தோழிகளும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

நிரஞ்சனி அகத்தியன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார் என்பதும் இவர்களின் திருமண பத்திரிகையை கனியின் கணவரும் இயக்குனருமான திரு அண்மையில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெஹந்தி வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டடித்து வருகிறது.