தமிழ் சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் வைஷ்ணவி அருள்மொழி.

அடுத்தகாக சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான அழகு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் வைஷ்ணவி.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் வைஷ்ணவி.இந்த தொடர் ரசிகர்கள் பேராதரவோடு 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியல்களில் அசத்தி வந்த வைஷ்ணவி தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தனது வெள்ளித்திரை என்ட்ரியை கொடுக்கிறார் வைஷ்ணவி.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விரைவில் இவர் வெள்ளித்திரையில் ஹீரோயினாக வரவேண்டும் என கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

nini serial actress vaishnavi arulmozhi debuts in movie with sabhaapathy