இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100-வது நாளை எட்டியுள்ளது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96.

96teluguremake

இப்படத்தில் நடித்த அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள். மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது.

96teluguremake

samantha

தெலுங்கில் ரீமேக்காகும் இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டனர் படக்குழுவினர். இதுகுறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.