தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,நீதானே எந்தன் பொன்வசந்தம்,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் நினைத்தாலே இனிக்கும்.இந்த தொடரில் ஆயுத எழுத்து தொடரில் நடித்து பிரபலமான ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.ஸ்வேதா சர்மா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருபவர் ஜனனி பிரபு.நளினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜனனி.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்,தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.