இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Nerkonda Paarvai Second Single EDM Song Featuring Kalki Kochelin Nerkonda Paarvai Second Single EDM Song Featuring Kalki Kochelin

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்திவருகிறது. ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகிறது. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது.

Nerkonda Paarvai Second Single EDM Song Featuring Kalki Kochelin Nerkonda Paarvai Second Single EDM Song Featuring Kalki Kochelin

படத்தின் முதல் சிங்கிள் வானில் இருள் பாடல் வெளியானது. தற்போது இரண்டாம் பாடலான EDM பாடல் இன்று மாலை 6:45 மணியளவில் வெளியாகவுள்ளது. கல்கி கோச்செலின் இந்த பாடலில் கௌரவ தோற்றத்தில் வருகிறார் என்பது தகவல்.

Nerkonda Paarvai Second Single EDM Song Featuring Kalki Kochelin Nerkonda Paarvai Second Single EDM Song Featuring Kalki Kochelin