தமிழ் சினிமா கண்ட சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் கடைசியாக என்.ஜி.கே திரைப்படம் வெளியானது. தற்போது எஸ்.ஜே.சூர்யா வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். 

nenjammarapadhillai

இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. 

sjsuryah

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன், ரெஜினா கேஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி வரும் டிசம்பர் 25 அல்லது டிசம்பர் 27 ஆகிய வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.