கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையில் கால் பதித்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் படத்தை இயக்கிவருகிறார். இன்று SK-வின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

doctor doctor

இந்நிலையில் நெல்சன் ட்விட்டரில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்துகள் பிரதர் மற்றும் நண்பர் சிவகார்த்திகேயன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் மெரட்டி வாழ்த்து போட வைக்குறீங்க பரவால்ல என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். 

nelsondhilipkumar

நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். வினய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் SK ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.