தளபதி விஜய் ரசிகர்கள் மறக்க முடியாத படங்களில் ஒன்று கத்தி. இந்த படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனங்கள் அரசியல் சூழலை விமர்சிக்கும் வகையில் அமைந்தது. அதே போல இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்ததால் இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. லைகா நிறுவனம் இலங்கையை சேர்ந்த நிறுவனம் என்பதால் அந்த படத்தில் விஜய் நடிக்க கூடாது என்று கத்தி படத்தை வெளியிட பல எதிர்ப்புகள் எழுந்தது.

இருப்பினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் கத்தி திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வெளியானது. பல்வேறு எதிர்பார்புகளுக்கும் மத்தியில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது ட்வீட் செய்த விஜய் படம் வராதுன்னு சொன்னாங்க தியேட்டர் ஜன்னலை உடைத்து 12 மணி வரைக்கும் டிக்கெட் கொடுக்க எண்ணி 12 வது நாள் 100 கோடி-ன்னு சொன்னாங்க என்று மாஸாக பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தி படத்தில் அவர் நடித்த புகைப்படத்தை பதிவிட்டு. இது எந்த படத்தின் புகைப்படம் ? மேலும் இந்த படம் 6 வருடத்திற்கு முன் வெளியானது, சூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதை பார்த்த தளபதி ரசிகர்கள், இவரது பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த லாக்டவுனில் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார் தளபதி விஜய். இந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி இணையத்தை பசுமையாக்கி வைரலானது.