மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Neelima Rani Takes A Break From Social Media

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Neelima Rani Takes A Break From Social Media

இந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அவ்வப்போது போட்டோக்களையும்,விடீயோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் இருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.இது அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.